Drug preguntas

Temple Chariot Festival details for 2010

Uncategorized No Comments »

Donation Details. Please read for more details…!

Uncategorized No Comments »

Donation Details. Please read for more details...!

Donation Details. Please read for more details...!

அனுமன் வழிபாடும் ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆலயத்தின் சிறப்பும்

Uncategorized No Comments »

இலங்கையில் இலைமறை காயாக காணப்பட்ட ஸ்ரீ ஆஞ்சநேயர் வழிபாட்டை கடந்த 20 வருடங்களாக ஸ்ரீமத் சந்திரசேகர சுவாமிகள் தன்னுடைய அயராத மன்றாட்டத்தினாலும் ஸ்ரீ ஆஞ்சநேயப்பெருமானால் கொடுக்கப்பட்ட தெய்வீக அருளினாலும் வெளிக்கொணர்ந்து இன்று இலங்கையின் அனைத்து பாகங்களிலும் ஸ்ரீ ராம வழிபாட்டுடன் கூடிய ஆஞ்சநேயர் வழிபாடு உலகம் போற்றும் வகையில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
அனுமன் சர்வ தேவதைகளின் வடிவம். எல்லா தேவதைகளும் அவருள் அடக்கம். இராம நாம மகிமையினையும் தூய பக்தி மற்றும் ஞானத்தையும், உயர்ந்த பக்தி நெறி நின்ற வாழ்வையும் உலகிற்கு எடுத்துக்காட்ட சாட்சாத் சிவபெருமானே அனுமனாக அவதரித்தார்.
ஸ்ரீ ராம பிரானின் தொண்டனான அனுமன் தான், இப் பூவுலகிற்கு இராம நாமத்தின் மகிமையை எடுத்துக்காட்டியவரும், சொன்னவருமாவார். இராம நாமத்தால் எதையும் வெற்றிகொள்ள முடியும் என்ற உதாரணம் காட்ட நீலக்கடலை ராம நாம உச்சரிப்புடன் தாண்டி இலங்கையில் சிறைப்பட்டுக்கிடந்த சீதையன்னையைக் கண்டு, வெற்றியோடு திரும்பி ராமரின் ஆனந்தத்தையும், ஆலிங்கனத்தையும் பெற்றார். ஸ்ரீ ராமனுக்கு அனுமன் அணுக்கத் தொண்டன். ஸ்ரீ ராமனையன்றி பிறிதொன்றை சிந்தையாலும் தொடாத தூய பக்தன். எங்கெங்கெல்லாம் ராம நாம சங்கீர்த்தனம் நடைபெறுகின்றதோ அங்கெல்லாம் ஆனந்தக்கண்ணீர் சொரிந்தபடி இரு கைகூப்பி நிற்பவன் அனுமன்.
பூத பிசாசங்கள் முதலிய தீய சக்திகள் அனுமனின் பெயர் கேட்ட மாத்திரத்தித்திலேயே நடு நடுங்கி ஒழிந்து போகும். கோரிய வரங்களை தடையின்றி தந்தருளும் அனுமன் எல்லா மதத்தவர்களாலும் வழிபடப்படுகின்ற ஒரு தெய்வம்.  அவரை வழிபடுவதால் எல்லாப் பிணிகளும் நீங்கி வாழ்வில் வெற்றி சேருமென்பதில் ஜயமில்லை. “புத்தி, பலம், கீர்த்தி, தைரியம், பயமற்ற மனோ உறுதி, உடற்பிணிகள் இல்லாமை, இவற்றுடன் உயர்ந்த நாவன்மையும் அனுமனை வழிபடுவோருக்கு அமையும். அப்படி ராம நாமத்தை உச்சரிப்பவர்க்கு, ராமனை வழிபடுவர்களுக்கு தானே வந்து அருள் புரிகின்ற அனுமனுக்கு ஆலயங்கள், இலங்கையில் அமைக்கப்பட்டுள்ளன. அவ்வாலயங்களில் கொழும்பு, தெஹிவளை போதிருக்காராம வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஜெயவீர பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆலயம் உலகப் பிரசித்திபெற்ற ஆலயமாக விளங்குவது பெருமைக்கும், அருளுக்கும், புகழுக்கும், அற்புதத்திற்கும் உரியதாகும்.
இவ்வாலயம் அருள்மிகு ஸ்ரீமத் சந்திரசேகர சுவாமிகளின் தனி முயற்சியாலும் பக்தர்களின் அயராத உழைப்பினாலும் முழுமூச்சுடன் குறுகிய காலத்தில்  இலங்கையின் முதல் தனிப்பெரும் ஆஞ்சநேயர் ஆலயம் தெஹிவளையில் சிறப்புடன் நிறைந்த எழிலுடன் அமைக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள மூலவர் ஆஞ்சநேயர் பஞ்சமுக வடிவுடன் நின்ற திருக்கோலமாக காட்சியளிக்கின்றார். அனுமந்தம், நரசிம்மம், வராகம், கருடன் இவை நான்கு திசைகளை நோக்கியபடியும்  ஹயக்ரீவம் இம்முகம் மேல்நோக்கியும், பத்துக்கைகளுடன் ஆஞ்சநேயர் தரிசனம் தந்து, கோடி கோடி மக்களின் மனதைக் கொள்ளை கொண்டுள்ளார்.
இவ்வாலயத்தின் வாயிலில்  நோய்களை தீர்க்கும் ஸ்ரீ தன்வந்திரி பகவானாக அமர்ந்துள்ளதும் இவ்வாலயத்தின் சிறப்பம்சமாகும். மற்றும் விநாயகர், நாகபூசணி அம்பாள், துர்க்கா, ல~;மி, சரஸ்வதி, லிங்கேஸ்வரர்,  தனா கர்ஷன ல~;மி சகித குபேரர், ஸ்ரீ பால முருகன், ஆண்டாள், நவக்கிரகங்கள், சகல கிரக தோஷ நிவர்த்தி செய்யும் ஆஞ்சநேயன், ஸ்ரீ வைரவர் பரிவார மூர்த்திகளாகவும் உற்சவ மூர்த்திகளாகவும் அமைந்துள்ளனர்.
ஸ்ரீ இராமர், சீதா, லட்சுமனர், ஆஞ்சநேயர் இவர்களை மூலஸ்தான பஞ்சமுக ஆஞ்சநேயர் நோக்கியபடி நிற்பது ஒரு சிறப்பாகும். மூலஸ்தானத்திற்கும் ஸ்ரீ இராமச்சந்திர மூர்த்திக்கும் இடையே யாககுண்டம் அமையப் பெற்றுள்ளது.
ஆலய மூல மூர்த்தி ஆஞ்சநேயராக இருக்கின்ற போதிலும் அனைத்துத் தெய்வங்களுக்கும் உரிய சிறப்புப் பூஜை, விரதங்கள் இங்கே அனுஷ்டிக்கப்படுவது மேலாகக் குறிப்பிடத்தக்கதாகும். ஆலயம் வரும் பக்தர்களின் மனம் மகிழும்படியும், மனநிறைவு கிடைக்கும் படியும் இப்பூஜைகள் அமைகின்றது.
இக்கோயிலில் விநாயகருக்கான விநாயகர் சதுர்த்தி, விநாயகர் கதை ஆகிய விரதங்களுக்கான சிறப்புப் பூஜைகள் நடைபெறும். அம்பாளுக்கு மாசி மகம், பங்குனித் திங்கள், ஆடிப்பூரம், ஆடிச்செவ்வாய், வரலட்சுமி பூஜை, நவராத்திரி, கேதார கௌரி காப்பு பூஜை, ஆகியனவும், சிவராத்திரி பங்குனி உத்தரம் லிங்கேஸ்வரருக்கும், குபேர ல~;மி பூஜை தீபாவளி நாளை ஒட்டியும் சிறப்புற நடைபெறும். தைப்பூசம், வைகாசி விசாகம், கார்த்திகை தீபத்திருநாள், ஸ்கந்த ஷஷ்டி விரதம் முதலிய விசேட தினங்களுக்கான பூஜைகள் ஸ்ரீ பால முருகனுக்கும், மார்கழி திருப்பாவை, ராம நவமி, கிருஷ்ண ஜெயந்தி, ராமர் கிருஷ்ணருக்கும் சீராக நடைபெறும். சனிமாற்றம், வியாழமாற்றம் எனும் கிரக மாற்றப் பூஜைகள் சிறப்பு ஹோமத்துடன் நடாத்தப் பெறும். தேரடி வைரவர் மடை வருடத்திற்கு மூன்று தடவைகள் நிறைவாகச் செய்யப்படுகின்றது.  ஒவ்வொரு ஞாயிறும் சகல தெய்வங்களுக்கும் பஞ்சாமிர்தத்துடன் கூடிய சிறப்ப அபிஷேகங்களும், போயா தினம் பௌர்ணமி நாள் கல்விக்கு அதிபதியான ஸ்ரீ சரஸ்வதிக்கு மாணாக்கர்கள் தங்கள் கையால் பாலாபிஷேகம் செய்யும் வரப்பிரசாதமும் குறிப்பிட்டுக் கூறக்கூடியதொன்றாகும். அத்துடன் பௌர்ணமி மாலை நேரப்பூஜையைத் தொடர்ந்து பெண்கள் கலந்து கொள்ளும் திருவிளக்குப் பூஜையும் நடைபெறுகின்றது. ராகு தோஷ நிவர்த்திப் ப+ஜை செவ்வாய்க்கிழமைகளில் பிற்பகல் 3.00 மணியின் பின்னர் ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் முன்னிலையில் நடைபெறும்.
இது தவிர இவ்வாலயத்தில் அமர்ந்துள்ள நவக்கிரக மூர்த்திகள் அனைவரும் ஒரே கோட்டு வரிசையில் தென் திசை நோக்கிய வண்ணம் தமக்குரிய வாகனங்களுடன் காட்சிதருகின்றனர். சூரியன் மத்தியாகவும், சூரியனது வலதுபக்கமாக முறையே திங்கள்,புதன்,குரு,சுக்கிரனும், இடது பக்கமாக முறையே செவ்வாய், சனி, ராகு, கேது அமர்ந்து இருப்பது இலங்கையில் இவ்வாலயத்தில் மட்டுமே. கிரகங்களை நோக்கியபடி இரண்டடி உயரமான ஆஞ்சநேயப் பெருமான் கைகூப்பிய நின்ற திருக்கோலத்தில், அடியார்களுக்கு கிரகங்களால் வரும் துயர் நீக்கி அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றார். அவருக்கு மக்கள் தங்கள் கைகளால் (பெண்கள் தவிர) வெற்றிலை மாலையிட்டு வேண்டிய வரங்களையும் வாழ்வில் வெற்றியையும் பெற்று மகிழ்வெய்துகின்றனர். இந்த ஆஞ்சநேயப்பெருமானுக்கு ஞாயிறு தோறும் நடக்கும் அபிஷேகம் காண தொலைதூரத்திலிருந்து பக்தர்கள் ஆலயம் வருகின்றார்கள் இவ்வாலய ஸ்ரீமத் சந்திரசேகர சுவாமிகளின் மன்றாட்டத்துடன் கூடிய இவ்வபிஷேகம் நீண்ட நேரத்தை எடுக்கும். பேய், பிணி, தோஷ நிவர்த்திக்காக அனுமன் முன்னால், இவற்றால் துயருறுபவர்களுக்கு நீர் தேகத்தில் ஊற்றி சுவாமி பக்தர் துயர்களை தீர்த்து அருள்வார்.
இவ்வாலயத்தில் ரசீது எடுத்து அர்ச்சனை செய்யும் வழக்கம் இல்லை. ஆலய பூசகர்களுக்கும் பூஜைக்காக தட்சணை கொடுக்கும் வழக்கமும் இல்லை. அனுமனை நினைந்து ஜம்புலன்களையும் அடக்கி “ஓம் ஸ்ரீ ராம ஜெயம்” என்று முடியுமானவரை சொல்லி மண்டியிட்டு தங்கள் பிரச்சினைகளை இறைவனுக்குக் கூறி வருந்தி முறையிட்டு, காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வழிபடுவது தான் பிரதான வழிபாடாக உள்ளமை குறிப்பிடத்தக்க ஒரு விடயம்.

பூஜையின் போது அலங்கார தீபங்கள் உட்பட அனைத்து தீபங்களும் அழகாக, அவசரம் இல்லாமல் ஆறுதலாக தெய்வங்களுக்கு காட்டப்படுவது ஒரு சிறப்பாகும். ஓவ்வொரு தெய்வங்களுக்கும் நாமார்ச்சனைகள் நடைபெறும் போது அங்குள்ள பக்தர்களும் “நமஹ” என்ற உச்சரிப்பை சொல்லிக்கொள்வார்கள்.  இங்கு உயாந்த மணிக்கோபுரத்தில் கண்டாமணி கட்டப்பட்டுள்ளது. தினமும் காலை 6மணி, காலைப்பூஜை ஆரம்பம் 8 மணி, உச்சிக்காலம் 12 மணி, சாயரட்சை 6 மணி இந்நேரங்களில் கண்டா மணி அடிக்கப்படும். மூன்றுநேரப் பிரசாதம் தினமும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. தினமும் அர்த்த ஜாமப் பூஜை நிறைவு பெற்றபின் முறையே ஸ்ரீ ராமர், ஸ்ரீ ஆஞ்சநேயர்,   ஸ்ரீ சக்தி, ஸ்ரீ சரஸ்வதி ஆகிய தெய்வங்களுக்கான மங்கள ஆரத்தி பாடல்களுடன்  ஆராத்தி காட்டப்பட்டு, ஆசீர்வாதம் பிரசாதம் வழங்கப்படும்.

இவ்வாலயத்திற்கு ஒரு அவதார புருஷராக  மிளிரும் ஸ்ரீமத் சந்திரசேகர சுவாமிகள் ஆஞ்சநேயரிpன் அவதாரமாகத் திகழ்வதில், மக்கள் தம் நோய் பிணி, வாழ்க்கைப் பிரச்சினை, பலதுயரங்களையும்  சுவாமிகளுடன் உரையாடி, தங்கள் துயர் இருளிலிருந்து விடுபட்டு மகிழ்வான வாழ்வு எய்துகின்றனர். சுவாமிகளின் சக்தியால் பல இன்னல்களில் இருந்து மீண்டவர்கள் ஆயிரம்! ஆயிரம்! சுவாமிகளின் தோற்றம் ஆஞ்சநேயரைப் போன்றே இருப்பது வியப்பானதே.
நற்சிந்தனையுடன் ஆஞ்சநேயரை வழிபடுங்கள் மனத்தைரியத்தைப் பெறுவீர்கள், பலவித அனுகூலங்களையும் அடைவீர்கள் என்று கூறி ஸ்ரீமத் சந்திரசேகர சுவாமி அவர்கள் ஆஞ்சநேய வணக்கத்தை இலங்கை மக்களிடையே அறிமுகப்படுத்தி அவர்களுக்காக மன்றாடிப் பிரார்த்தித்து அவர்களது வாழ்க்கையில்  ஒளிவீசப் பண்ணினார்.
இவ்வாலயத்து விக்கிரகங்கள் அனைத்திற்கும் சுத்த வெள்ளியினால் ஆன கவச அங்கிகள் வார்க்கப்பட்டுள்ளன. விழாக்காலங்களில் நவக்கிரகங்களுடன் கூடிய சகல தெய்வங்களும் வெள்ளிக் கவசத்தில் காட்சிதருவது மனதில் மென்மேலும் ஆனந்தத்தையும் பக்திப்பரவசத்தையும் அளிக்கின்றது. மூலவர் ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயரின்  கர்ப்பக்கிரகக் கோபுரத்தில்  உலக சகலநாட்டுக் கொடிகள் நாட்டப்பட்டிருப்பது சகல நாடுகளிலும் வாழும் மக்களுக்கு அனுமனின் அருளும் ஆசியும் கிடைக்க வேண்டும் என்ற சுவாமிகளின் வேண்டுதலாக இருப்பது போற்றுதற்குரியதும் வணக்கத்திற்குரியதுமாகும். பக்தர்களால் அன்பாக ஆஞ்சநேய சுவாமிகள் என்று அழைக்கப்படும் சுவாமிஜி அவர்கள் கடல்கடந்து சீதை அன்னiயின் துயர் தீர்த்த அனுமனைப்போல், இலங்கையை விட்டு வருடாவருடம் கடல் கடந்த நாடுகளுக்குச் சென்று அங்குள்ள ஆலயங்களில் பக்தர்களுக்குத் தரிசனம் கொடுத்து, மாறாத நோய் தீராத துன்பங்களுக்கு நிவாரணம் அளிக்கும் சஞ்சீவி  ராஜனாக திகழ்கின்றார்.
இவ்வாலயத்திற்கு கடல் கடந்த நாடுகளில் இருந்து உல்லாசப் பயணிகளும், ஆன்மீக ஈடேற்ற யாத்திரிகர்களும் வருகைதந்து ஆஞ்சநேயர் பூஜை கண்டும் வழிபட்டும் நிறைந்த பக்தியுடனும், மனநிறைவுடனும் செல்வது அவர்களின் வதனங்கள் சொல்லும். குறிப்பாக வட இந்தியர்கள் அனுமனை வழிபடுவது ஆஞ்சநேயர் ஆலயத்தில் அவர்களின் எண்ணிக்கையற்ற வருகை உணர்த்துகின்றது. குழுக்களாகப் பிரிந்து இவ்வாலய தரிசனத்திற்கு வந்து செல்கின்றனர். இவ்வாலயத்தின் சிறப்பு அம்சங்களும், அற்புதங்களும், சுவாமிகளின் அற்புதங்களும் சக்தியும் உலகெங்கும்  புகழ் பரவி நிற்கின்றது. ஸ்ரீ ராம நாமமும் ஓங்கி ஒலிக்கின்றது.
துயர்களை நீக்கி வேண்டும் வரங்களை அள்ளி வழங்கும் அனுமந்த ராஜனுக்கு பிரத்தியேக அபிஷேகம் சங்காபிஷேகத்திற்கு இங்கு இயற்கை வலம்புரிச்சங்குகள் உபயோகிக்கப்படுகின்றது. எந்த ஒரு ஆலயத்திலும் இல்லாத ஒரு சிறப்பு இதுவாகும்.
ஸ்ரீ ஆஞ்சநேயர் எண்ணற்ற பக்தர்களை தம்பால் ஈர்த்துக் கேட்டவர்க்குக் கேட்டபடி இன்னருள் புரிகின்றார். நான் படும்பாடனைத்தையும் எனைப்படைத்த அந்த நான்முகன்தான் அறிவாரோ, அல்லது என் கணக்கை நாளும் பொழுதும் எழுதித்தள்ளும் சித்திரகுப்தன்தான்  அறிவாரோ என்று ஏங்கித் தவிக்கும் எண்ணற்ற பக்தர்களுக்கெல்லாம் தஞ்சமென்றிருக்கின்றார் ஆஞ்சநேயமூர்த்தி. அவரின் அருளைத் துணையாகக் கொண்டு, நாடுவிட்டு நாடுசென்று வெளிநாடுகளில்வாழும் இளைஞார், யுவதிகள் எல்லோருக்கும் சரணாகதியாக இருப்பவரும் ஆஞ்சநேயரன்றோ! கடல்கடந்த நாடுகளிலிருந்து அவர்கள் ஆஞ்சநேயரை வாழ்த்துகின்றார்கள், வணங்குகின்றார்கள், வாரிவழங்குகின்றார்கள் ராம தூதனின் தூதனை - ஸ்ரீமத் சந்திரசேகர சுவாமிகளை அவர்கள் நன்றிக்கடனோடு நினைவுகூறுகின்றார்கள்.

ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆலயத்தில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா அதுவே ஆலயத்தின் பெருந்திருவிழா உற்சவ காலம். மற்றைய  ஆலயங்களில் மூலவர் எந்ததெய்வமோ அந்த தெய்வத்திற்கு மட்டுமே பத்து தினங்களோ பதினைந்து தினங்களோ உற்சவம் நடைபெறும். ஆனால் அனுமன் ஆலயத்தில் முதல் நாள் கணபதி ஹோமத்துடன் ஆரம்பிக்கும் கணபதிக்குரிய திருவிழா மறுநாள் நவக்கிரகங்கள், தன்வந்திரி பஹவான், சிவன், விஷ்ணு, அம்பாள் வைரவர், முருகன், துர்க்கா லட்சுமி சரஸ்வதி குபேரர், ராமர் சீதா லட்சுமனர் ஆஞ்சநேயர் இப்படி தினம் ஒரு பரிவார மூர்த்திகளுக்கு விழா எடுக்கப்படும். ஆஞ்சநேயப்பெருமானின் ஜென்ம நட்சத்திரம்  மார்கழி மூலம் ஆகும். அன்றைய தினமே உற்சவ முடிவுநாள், அதன் முதல் நாளே சித்திரத்தேர்த் திருவிழா உலகிலேயே இலங்கையிலேயே முதன் முதல் தேர் செய்யப்பட்டு(பெரு வீதி) நகர்வலம் வருவது இவ் ஆஞ்சநேயர் ஆலயத்தில் தான் என்ற பெருமை இவ்வாலயத்திற்கு சேரும்.
வருடா வருடம் இத்திருவிழாவின் ஆரம்ப நிகழ்ச்சியாக ஸ்ரீ ஆஞ்சநேயப்பெருமானின் பதியம் பெற்ற நுவரெலியா ஸ்ரீ சீதையம்மன் ஆலயம் சென்று கொடிக்கம்பமும், தீர்த்தமும், மண்ணும் எடுத்துவரப்பட்டு ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆலய முன்றலில் சுபநேரத்தில் நாட்டப்பட்ட பின்பே இவ்வாலய வருடாந்த ஜெயந்தி விழா உற்சவம் ஆரம்பிக்கும்.
ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆலய ஜெயந்தி விழா உற்சவம் எதிர்வரும் 23ம் திகதி ஸ்ரீமத் சந்திரசேகர சுவாமிகளின் தலைமையில் விசேட சமயாச்சாரியர்களின் அருளாசியுடன் உலக மக்களின் சேம நலன்களின் நிமித்தம் ஸ்ரீ மஹாகணபதி ஹோமத்துடன் 12 நாட்களுக்கான பூஜை ஆரம்பித்து நடைபெற்று எதிர்வரும் 02.01.2011, ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகாலை விசேட வசந்த மண்டபப் பூஜைகள், சமய குரவர்களினால் நிறைவேற்றப்பட்டு, விசேட மலர் அலங்காரத்துடன் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர், ஸ்ரீ ஜெயவீர ஆஞ்சநேயர் ஆகிய மும்மூர்த்திகளுடன் பக்தர்கள் வடம்பிடித்து வர திருத்தேர் பவனி உற்சவமானது ஆரம்பிக்கும். ஜந்து முகம் கொண்ட கலையழகு மிகு ஆஞ்சநேயன் நடுநாயகமாக வீற்றிருந்து அருள் புரிய, அவர்தம் அடியார்கள் ராம நாம ஜபத்துடன் வலம் வர திருத்தேரில் பக்தர்களின் வாயிலில்  சிறப்புற நின்று அருள்பாலிக்கின்றார் ஸ்ரீ ஆஞ்சநேயர். சிரஞ்சீவி ஆஞ்சநேயனை மன்றாடி மன்றாடி சுவாமிஜி முன்னால் வர பக்தர்கள் வடம் பிடிக்கும் இத்தேர்த்திருவிழாவை காண கண்கள் கோடி வேண்டும் என்றால் மிகையாகாது.
ஆரம்ப மூர்த்தியான எழுந்தருளி ஆஞ்சநேயருடன் திருத்தேரிலே விநாயகர் சகிதம் ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் 12 தினங்கள் கிரமமாக சமயாசாரியர்களின் விசேட புரோகிதத்தை ஈர்த்து அடியார்களுக்கு சோருதல் இல்லாமல் கேட்டன அருள வீதி வலம் வருகின்றார்.
அதற்கு அடுத்த தினமான 3ம் திகதி காலை கடல் தீர்த்தத்துடன் ஆரம்பித்து காலை 9.00 மணிக்கு 409 வலம்புரிச்சங்குகளினால்  மூலவர் ஸ்ரீ ஜெயவீர பஞ்சமுக ஆஞ்சநேயப்பெருமானுக்கு அபிஷேகம் நடைபெறும். அதனைத்தொடர்ந்து உச்சிக்காலப் பூஜை விஷேடமாக நடைபெறும். மாலை 5.00 மணிக்கு பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு விசேட வடைமாலை அலங்காரம் இடம்பெறுவதோடு, இவ்ஜெயந்தி விழாவின் நிறைவு நாளில் உலகெங்குமுள்ள  ஸ்ரீமத் சுவாமிஜியின் அடியார்கள் செய்யும் “குருபாத பூஜை“ குரு வழிபாடாகவும் அமையப்பெறுவது சிறப்பம்சமாகும். அதனைத்தொடர்ந்து திருவூஞ்சலுடன் உற்சவ அருட்காட்சி நிறைவுபெறும்.
இலங்கையின் பலபாகங்களிலிருந்தும், இந்து மதத்தவர் மட்டுமன்றி பல்வேறு மதங்களையும், பல்வேறு இனங்களையும் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தகோடிகள் வருடா வருடம் நடைபெறும் இப்பெருவிழாவில் பங்குகொண்டு நினைத்ததை அடைந்து பேரானந்தம் அடைகின்றார்கள்.
பலவிதத்திலும் வித்தியாசமான, அதிசயமான, அழகான அருள்நிறைந்ததான ஆலயமாக விளங்குவது இந்த கொழும்பு,தெஹிவளை ஸ்ரீ ஜெயவீர பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆலயமாகும். படி ஏறி;;; தன் பதம் தேடி வந்த பக்தர் குறை தீர்த்து அனுப்பும், அபயக்கரம் “அஞ்சேல்” என்று மொழிய ஆசி கூறி நிற்கும் அனுமன் பதம் பணிவோம். அவன் அருளால் அவனியில் அனைத்தையும் பெற்று வாழ்வோம்.

ஓம் ஸ்ரீ ராம ஜெயம்

virakesari on 4.04.2010

Uncategorized No Comments »

New CD Release and CD Cover

Uncategorized 1 Comment »

Muruga Mantras

Uncategorized 1 Comment »

Skanda Shasti Kavacham - Part 1 Skanda Shasti Kavacham - Part 2
Thiruppugazh Skanda Guru Kavacham - Part 1
Skanda Guru Kavacham - Part 2 Kandhar Anubhoothi - Part 1
Kandhar Anubhoothi - Part 2 Kandhar Anubhoothi - Part 3

Skanda Shasti or Kanda Shasthi

Uncategorized 1 Comment »

Who is Lord Muruga?

Lord Muruga, the younger brother of Lord Ganesha, is the protector of our earth plane. As the protector, he is ever concerned about the welfare of human beings and the planet earth. Muruga is also the Lord of the Pleiades (A star cluster in the constellation Taurus). Lord Muruga is associated with the birth star Krithika; a very precious birth star. He represents the primordial energy and force.

Lord Muruga is more popular in South India compared to other parts of India. He is the God of war and the patron deity of the Tamil land (Tamil Nadu); and is known by many other names, including Senthil, Saravana, Karttikeya (meaning ’son of Krittika’), Arumugam or Sanmuga (meaning ‘one with six faces’), Kumara (meaning ‘child or son’), Guha, Skanda, Subrahmanya, Velan and Swaminathan.

Lord Muruga is known to guide human beings to a higher life. Basically a celestial warrior, he constantly battles and destroys demons that prevent good things (the grace of light) from entering the earth plane.

Kartikeya is symbolized with the weapons he wields on the battlefield - Vel, the Divine Spear or Lance that he carries and his mount, the peacock. He is depicted with many weapons including a sword, a javelin, a mace, a discus and a bow or wielding a spear. This symbolizes his purification of human ills. His javelin symbolizes protection, discus symbolizes knowledge of the truth, mace represents strength and bow shows ability to defeat all ills. His peacock mount symbolizes the destruction of the ego.

His six heads represent the six siddhis bestowed upon yogis over the course of their spiritual development.

The Legend and his “6 Battle Houses”:

As Lord Muruga emerged as six sparks of flame from the third-eye of Lord Shiva, he always defeats the evil forces to save his devotees and disciples. The popular south Indian maxim goes, “Wherever there is a mount, there is a shrine for Lord Muruga; the omnipresent!”

Lord Muruga has six famous abodes in Tamil Nadu which are collectively known as ‘Arupadai Veedu’. In Tamil ‘Aru’ means six and ‘Veedu’ means home. Every abode of Lord Muruga commemorating an event mentioned in the puranas(old stories). Thiruparankundram, Thiruchendur, Palani, Swamimalai, Thiruthani and Palamuthircholai are His six abodes.

Thiruparankundram (5 kms from Madurai)

This is the first abode of Lord Muruga lying on the outskirts of Madurai in Tamil Nadu. God here is worshipped as Lord Subramanya Swami and this is the place where he wedded Shri Deivanai, daughter of Deivendiran, the leader of Devas, in the presence of Sun and Moon. As per legends, it is told that after having won the demons, the Lord was honored and celebrated by offering Deivanai as his consort. This was to thank the Lord from saving from cruel bondage with the demons.

The temple is situated at the foot of 700 foot high rock and it has separate shrines for Lord Ganapathy, Lord Shiva, Devi Durga and Lord Vishnu. The entrance of temple has 48 Nayakkar period pillars with engraved artistic cravings. The speciality of Thiruparankundram is that the innermost shrine has been carved from a single rock. Thiruparankundram is also renowned as an auspicious place for conducting marriages.

In this temple, there is ‘Saravana Poigai’ a holy water tank from where water will be brought by the elephant for ‘Abhisekam’.

Thiruchendur (100km south of Madurai):

Tiruchendur is the second abode of Lord Muruga. Here he is worshipped as Lord Bala Subramanya Swami, Lord Senthil Nathan and Lord Senthil Kumar. This is a unique abode of Lord Muruga situated on the seashore; whereas other abodes are on the top of hills.

It is believed that the temple was built by Desigamoorthy Swamigal belonging Thiruvaduthurai Adeenam about 300 years ago. The main tower is 137 foot high and is 90 ft by 65 ft at base. It has 9 levels to indicate 9 kalasams which are placed on the top of the tower. There are two corridors in the temple where we can see various deities. After circumambulating two corridors, one reaches the Mahamandapam (the inner area lying in front of the sanctum) for a darshan of the main deity Lord Bala Subramanya Swami.

This shrine is famous for the festival ‘Kantha Sashti’ which is cordially celebrated every year. On that day, thousands of devotees assemble on the sea shore to see the climax of the festival where Lord Muruga kills the demons Surapadma and his brothers.

Palani (120 kms west of Madurai)

This is the third abode of Lord Muruga where he stands on the top of 150 m high rock. Here he is known as Sri Palani Andavar, the lord with the staff in his hand. The deity at the sanctum is made out of an amalgam of nine important minerals called as ‘Nava Bashana‘. The deity here is also called as Lord Palani Appan and Lord Andiappan.

There is a legend as to how Lord Muruga came to this sacred shrine. Shri Narada Muni, a sage, once brought a golden mango to the home of Lord Shiva seated with his consort and children Lord Vinayaka and Lord Muruga. Narada Muni gave the fruit to Lord Shiva and prayed him to eat it since it was rare and fruit of Gnana (fruit of wisdom). The divine couple wanted to give it to their children. But the conditiom was that it should be eaten wholly for its total benefits. Lord Shiva announced a contest, wherein whoever completed one round of the globe first would get Gnana Fruit.

Lord Muruga immediately mounted on his vehicle peacock to go around the world. But, Lord Vinayaka’s mouse was no match for the peacock in its speed. Lord Vinayaka circumambulated his parents, symbolizing the world and got the fruit. On return, Lord Muruga found that he was cheated. In anger, he renounced his family and came to Palani to settle. Lord Shiva and Devi Parvathi came to pacify him, and named the vortex as Palani.

‘Thaipoosam’ is cordially celebrated every year here. The temple is very spacious with beautiful mandapams and carved pillars. Golden Chariot is the speciality of this shrine. The great Tamil poetess and saint Avvaiyar had been tested for her knowledge by Lord Muruga. Here is where Lord Kanda blessed the old Tamil Poetess with bountiful knowledge.

Swamimalai (5 km away from Kumbakonam):

It is the fourth abode of Lord Muruga. Here our Lord gets the name ‘Swami Nathan’ as he expounded the meaning of Pranava mantra ‘Om’ to His father Lord Shiva. The temple is about 5 km away from Kumbakonam in Tamil Nadu, on the bank of River Cauveri. Legend has it that saint Bhrugu before commencing an arduous tavam or penance; got the boon anybody disturbing his meditation will forget all his knowledge. Such was the power of the penance the sacred fire emanating from the head of the saint reached up to the heavens and the frightened Devas surrendered to Lord Shiva praying for His grace. The Lord extinguished the sacred fire by covering the saint’s head by hand. With saint’s penance thus disturbed the Lord became oblivious of all His knowledge and is said to have regained them by learning Pranava mantra from Lord Muruga at this shrine.

Once when Brahma, the Lord of all creations was proceeding to Kailash, the child Lord Muruga asked Him for the meaning of Pranava mantra, ‘Om’. When Brahma admitted His ignorance, the Lord imprisoned Him. With Brahma imprisoned, all creations came to a standstill and the Devas prayed to Lord Shiva to get Brahma released. Lord Muruga expounded the meaning of ‘Om’ and only after Shiva accepted Muruga as a Guru and listened to the exposition as a devoted disciple. The temple is built on an artificial hillock of about 60 foot height with beautiful laid stone steps representing the Hindu cycle of sixty Tamil years leading to the Lord. In the ground floor there are temples dedicated to Lord Sundareswarar and Goddess Meenakshi. Every year Chitra Pournami is celebrated in this shrine.

Tiruthani (50 Km north of Chennai):

According to Puranas, Lord Muruga married Shri Valli in this shrine, and he is called Bala Subramanya Swami. The shrine is situated at about 50 km north of Chennai, Tamil Nadu, at a 250 m high mountain. Thiruthani is famous for Adi Krithikai festival between the months of July and August. On this festival thousands of devotees offer flower kavadi to Lord Muruga. Kantha Sashti is another festival celebrated here in the months of October and November.

It was only upon worshipping Lord Muruga at Thiruthani, the king of snakes Vasuki got his wounds healed which was caused during the churnning process in the Milky Ocean to get Amrita held by Devas and Demons. It was here Lord Brahma propitiated the Lord Muruga at a holy spring known as Brahma sonai after his imprisonment by our Lord for his failure to explain the Pranava mantra ‘OM’

Saint Arunagirinathar has praised this hill as the chosen place for worship by the great devas and the favorite abode of saints to perform prolonged tapas (meditating on God for years together at a stretch). Sri Muttuswami Deekshitar, who lived 200 years ago (one of the trinity of the “Carnatic music’- the Traditional music of south India) had his inspiration in Tiruthani when the Lord Muruga (in the disguise of an old man) met him on the steps of the temple and sweetened his tongue with the prasad of this temple. This had provoked him to sing his first song on Lord Muruga of Tanikai

Pazhamudircholai (10 miles north of Madurai):

This is the sixth abode of Lord Muruga which lies about 19 km away from Madurai, Tamil Nadu. Lord Muruga stands on the top of the hill which can be reached by the motarable road, and he is called “Solaimalai Murugan” here. This very beautiful shrine is surrounded by green woods, shrubs and hills. At the foot of hills is the, “Alagar Kovil” temple which is one of the important temples of Lord Vishnu.

Pazhamudircholai is the abode where Lord Muruga stands with both his consorts Shri Valli and Shri Deivanai. Though the temple is the simplest of all, it is the most beautiful one amidst natural sceneries.

Pazhamudircholai is a hill rich in fruits, vegetables and flowers. It is a dense forest where “Valli” is supposed to have lived. There is a temple tower and monkeys abound around the area. It is a fertile hill with many natural springs and herbs.

Although there are hundreds of temples in Tamil Nadu for Lord Muruga, these six temples called the “Arupadaiveedu” are very famous, and devotees throng them throughout the year. It is in these places the legends of Lord Muruga are associated.

About Sani Peyarchi

Uncategorized 1 Comment »

Sanee (Saturn), the Lord that brings us all good things transits from Simha Rasi (Leo) to Kanni Rasi (Virgo) on Saturday 26th September, 2009 and is going to remain there for the next two and half years. This shift is going to bring in mixed fortunes.

Rasis/Signs affected by Sani Peyarchi
Kumbam (Aquarius) Meenam (Pisces) Simmam (Leo)
Kanni (Virgo) Thulam (Libra)


It is advised that persons in all Rasis in general and those born in the above Rasis in particular perform Poojas to appease Lord Sani.

THIRUNALLAR (near Karaikal) is the temple for Saneeswarar and is one among the Nava Graha Stalams. The presiding deity here is Saneeswara Baghawan with goddess Praneswari.



Silpa Ratnakara, describes Sani as black hued, having eagle as his mount, wields sula, wearing blue garments, blue flowers and ornaments. In the south, the crow is represented as his vehicle. Nala was seized by Saturn and he had to undergo several troubles on that account. Finally he bathed in Nala Tirtham, a sacred pond in Tanjore District near Karaikkal and got rid of the seizure.

Birth of Saturn : Samja, the wife of the Sun could not bear the intense heat of her husband. She created a duplicate of her form called Chaya, left her in the house and went away to her parents. The Sun not aware of this plot lived with Chaya, thinking her to be his wife, she begot a son to Sun and he is Saturn.

Sani Peyarchi Special Pooja
Saneeswarar Temple
Only Navagraha Stalam for Lord Saneeswarar

Thirunallar

Purataasi Saturday Pooja

Uncategorized No Comments »

The month of Purataasi (mid September to mid October) is dedicated to the worship of Maha Vishnu (the Preserver). It is the period of the year in which we pay homage to Lord Vishnu. It was in the month of Purataasi, Lord Vishnu in the form of Sri Venkata Chala Pathi (Balaji) came to earth to guide people. Lord Vishnu is also called by several names like Emperumal, Govinda, Gopala, Venkateswara, Hari Narayana, Balaji, Srinivasa, Ranganatha, Ramchandra, etc

Mahalaya Amavasya

Uncategorized 2 Comments »

The dark fortnight of Aswayuja (September-October) is known as the Mahalaya Paksha or the fortnight specially sacred for offering oblations to the departed ancestors. The last day of this period, the new moon day, is considered as the most important day in the year for performing obsequies and rites.

The renowned hero of the Mahabharata, Karna, when he left the mortal coil, ascended to the higher worlds and the great charity he had done here was returned to him hundredfold. But, it was all gold and silver; there was no food, as he had not done any food-charity! He prayed to the god of death. So, he was sent back to earth for fourteen days, to make up for this deficiency.

For fourteen days, he fed Brahmins and the poor, and offered oblations of water. On his return to the higher regions, he had food in plenty. It is these fourteen days that are commemorated in the Mahalaya Paksha. Due to the grace of the god of death, it has been ordained that offerings made during this period benefit all the departed souls, whether they are connected to you or not.

Charity in the form of food is important during this observance. Life depends upon food. You cannot preach religion to empty stomachs. This human body is the most important vehicle for realising God. How precious must food be which keeps the body fit for Yoga! The gift of food is the greatest gift. Therefore, give food in plenty, not only during the Mahalaya fortnight but all through the year